வெற்றிடம்...

 
மீண்டும் ஒரு வெற்றிடம் 
நிரப்ப முடிய வெற்றிடம் 

கனலால் நிரப்பிட முயல்கின்றேன் 
ஆழிபேரலை அடித்து செல்கிறது 

கூழாங் கற்களும் முயற்சித்தேன் 
நொறுங்கி மண்ணாய் ஆகியது 

எதை எதையோ கொண்டு 
எப்படி எப்படியோ முயற்சித்தேன் 

நிச்சயமாய் தெரிந்த ஒன்று 
வெற்றிடம் நிரம்புவதாய் இல்லை 

நிரப்ப முயற்சிக்கும் எனக்கும் 
புரிபடாமல் இல்லை இது 

சிலதுளி கண்ணீர்த்துளிகளால் முடியுமா 
முயற்சித்து தோற்கிறேன் நித்தமும்
 
 
 
--பிரியா