இரவுடன் நான்...

 
ஓர் இரவு 
ஒற்றைக் கூரை 
நிலவும் வேண்டாம் 
விண்மீனும் வேண்டாம் 

தொட்டு வைத்த
புள்ளி போல 
போட்டு வெளிச்சமும் 
வேண்டவே வேண்டாம் 

விட்டு விடுங்கள் 
இப்படியே விடுவித்து 
நானும் இரவுமாய் 
பேசிக்கொண்டு இருக்கிறோம்!

சொல்லொனா துயரங்கள் 
விடைபெற வேதனைகள் 
மௌனத்தின் பாசையில்
இடைவிட பரிமாற்றங்கள் 

கதைகத்தான் எத்தனையோ 
முடிக்கத்தான் பார்க்கிறோம் 
கொஞ்சமேனும் நீளட்டும்
இவ்வினிய இரவு 

விட்டு விடுங்கள் 
இப்படியே விடுவித்து 
நானும் இரவுமாய் 
பேசிக்கொண்டு இருக்கிறோம்!
 
 
--பிரியா