என் தேசம்

பழம்பெருமைகள் ஆயிரம் 
உண்டிங்கு எங்களுக்கு 

உலகிற்கே ஆசான் 
நாகரீக வாழ்கையில் 

கணிதத்திலும் செய்தோம் 
சாதனைகள் பல 

விண்வெளியும் எங்களுக்கு 
விளங்காத பொருளல்ல 

கவிதை இலக்கியம் 
அனைத்திலும் முன்னோடி 

திரை சீலையாய் 
இவையெல்லாம் கண்முன் 

திரையை கொஞ்சம் 
விலக்கி பார்த்தால் 


மறைத்து வைத்தவை 
கோரமாய் ஆடிடும் 

என்னதவம் செய்தனை 
பாடினான் பாரதி 

வார்த்தைகள் பொய்த்தது
இப்பாரதம் பார்க்கையில் 

பாரதியும் பெரியாரும் 
போதாது எங்களுக்கு 

பெண்ணடிமை பேய்தனை 
தொலைதூரம் விரட்ட 

காந்தியும் புத்தனும் 
பிறந்தென்ன பயன் 

கொள்கைகள் மாய்ந்தன 
அவருடன் சேர்ந்தே 

அறிவியல் ஆராய்ச்சி 
அருபெரும் வளர்ச்சி 

அப்பட்டமாய் தெரிகிறது 
புதுமை குற்றங்களில் 

நிகழ்வுகள் எவ்வளவோ 
நிதமும் சுற்றிலும் 

அரிவாளோ அமிலமோ 
அவள்நிலை அப்படியே 

பார்வையாளனாய் திரிகையில் 
பாறையாகிறது நெஞ்சம் 

வெறுமையாய் மனம் 
வெம்பிவெம்பி தோற்றதால் 

மதமென மொழியென 
மாறியே திரிந்தாலும் 

இதில்மட்டும் மாற்றம் 
இம்மியலவிலும் இல்லை 

வேற்றுமையில் ஒற்றுமை 
பெருமைதான் என்சொல

 

 

--பிரியா