எனக்கான.........

எனக்கான இசை 
எனக்கான சாரல் 
எனக்கான தென்றல் 
எனக்கான பூக்கள் 

எல்லாமும் காத்திருக்கின்றன 
கம்பிகளுக்கு வெளியில் 

நகர்ந்தே செல்லும் 
நகராத நாட்கள் 

எனக்கான அவைகளுக்காயும் 
அவைகளுக்கான எனக்காயும்

அடைபட்ட சிறைக்கைதியாய் 
உள்ளிருந்தே கனக்கின்றேன் 

எனக்கான அனைத்தும் 
காத்துக் கொண்டிருப்பதை

அறிந்தும் அறியாமலும் 
தெரிந்தும் தெரியாமலும்

 

 

--பிரியா