அடிமை சுதந்திரம்....

 
சுதந்திரதிற்க்காய் ஒரு போராட்டம் 
போரடுவதற்க்காய் ஒரு சுதந்திரம் 

எல்லோருக்கும் ஏதாவதொரு காரணம் 
எத்தனைதான் வென்றது இங்கே 

பேருக்காய் சுதந்திரம் பெற்றவர்கள் 
யாருக்கோ இங்கே அடிமைகளாய் 

எவரோஒருவர் அடிமையாக்கிய போதும் 
யாரோ ஒரு சிலர் சுதந்திரமாய் 

அனைவர்க்கும் விடுதலை என்றானபோதும் 
இன்னும் ஒருசிலர் அடிமைகளாய் 

உண்மை சுதந்திரம் என்பதென்ன 
பெற்றும் பெறாமல் இருப்பதா 

கேள்விகள் எத்தனையோ உள்ளுக்குள் 
பதில்கள்தான் தேடியும் காணோம்...
 
 
 
--பிரியா