எண்ண அலைகள்...

 
எண்ணங்கள் ஆக்கிரமிக்கும் உள்ளத்தில் 
எழுவதற்கு அலைகள் எத்தனையோ!

கட்டுபடா வேகம் தீர்மானிக்கும் 
நிகழ்கால புரிபடா புதிர்களை 

அலைகளின் வேகம் குறையாதவரை 
முக்காலமும் முடியா காலம்தான் 

எத்தனைதான் வார்த்தைகள் எழுவதற்கு 
கட்டுபடாதவை கவலையின் சாசனம் 

வார்த்தையும் அலையும் கட்டுப்பட்டால் 
காலத்தின் ஞானி நாமே!
 
 
 
--பிரியா