கொள்பவரும் - கொடுப்பவரும்

கொடுப்பவர் ரசிக்க 
கொள்பவர் மகிழ 

கொடுப்பவர் ஒருவர் 
கொள்பவர் ஒருவர் 

கொடுப்பதும் கொள்வதும் 
அவரவர் பொறுத்தே 

கொடுப்பவர் நாமெனில் 
கொடுப்பது நலமே 

கொள்பவர் நாமெனில் 
சரியாவது எங்கனம் 

கொடுப்பதும் கொள்வதும் 
அவரவர் விதிப்படி 

முணுமுணுத்துச் செல்லும் 
ஆங்கொரு கூட்டம் 

விதித்தவன் என்றிவர் 
சொல்லும் ஒருவன் 

அந்தோ பரிதாபம் 
உள்ளிருப்புச் சிறையில் 

என்செய்வான் - அவனுக்கும் 
கொடுப்பவர் கொடுத்தால்தானே

விதியினை விரட்டி 
வீதியில் நிறுத்தி 

உழைப்பை நம்பி 
வீசி நடந்தால் 

கொள்பவர் எதற்கு?
கொடுப்பவர் எதற்கு?

 

 

--பிரியா