சத்திய சோதனை - இது நித்திய வேதனை.....

 
நிழல்கள் நிஜமென உரைக்கையில்
நிஜங்கள் நிழலாய் மாறும் 

கற்பனை வித்தைகள் கூத்தாட 
கைசுட்ட உண்மைகள் மௌனியாய் 

நெஞ்சுரைத்த உண்மை பொசுங்கையில்
நெஞ்சம் துடிக்கத்தான் செய்கிறது 

துடிக்கின்ற நெஞ்சுடன் சத்தியமும் 
சேர்ந்தே துடிக்கும் உயிர்வாழ 

நஞ்சுதோய்த்த கைகள் தீண்ட 
தூர்ந்துதான் போயிற்று உண்மையும் 

சத்திய சோதனை - இது 
நித்திய வேதனை 

தோற்றுத்தான் போகுமோ நெஞ்சம் 
நய்ந்துதான் போகுமோ கொஞ்சம் 

உரைத்திட்ட வார்த்தைகள் - கடல் 
சேர்ந்திட்ட ஒற்றை துளியாய் 

சேர்ந்த இடம் தெரியவில்லை 
சேர்ந்ததா இதுவும் புரியவில்லை 

செப்படி வித்தைகள் ஓராயிரம் 
செய்துதான் பார்த்தது நிதம் 

உண்மை உரைத்து வெளிக்கொணர 
தோற்றுத்தான் போகிறது நெஞ்சம் 

வித்தைகள் எல்லாம் சருகாய் 
காய்ந்த பயிராய் மாறிட 

சத்திய சோதனை - இது 

நித்திய வேதனை

 

 

--பிரியா