பிரிவு...

 
நினைவுகளின் வனத்தில் 
தட்டானின் வசந்தங்கள் 
நிஜங்களோ மனதில் 
நீங்காத தடயங்கள் 

பிளவின் தருணம் 
தகிக்கும் நிலவு 
சொந்தம் சேர்கையில் 
குளிரும் சூரியன் 

இரவும் வேண்டாம் 
பகலும் வேண்டாம் 
உறவுகள் செல்லட்டும் 
இடைப்பட்ட மாலையாய்!
 
 
--பிரியா