ஆசை

 
காற்றை கடந்து காலம் கடந்து 
உன் சுவாசம் கலக்க ஆசை!

நேற்று இன்று நாளையென
எல்லைகள் கடந்து 
என்றும் உன்னுடன் வாழ்ந்திட ஆசை!

எனக்காய் உனக்காய் என்பதெலாம் மறைந்து 
நமக்கே நமக்காய் இணைந்திட ஆசை!

என் விரலின் இடைவெளிகளை 
உன் விரல்கள் நிரப்பிட ஆசை!

ஆசைதான் அத்தனைக்கும் - இறுதியில் ஆசைகள் 
நிராசையாய் ஆகிடாமல் இருக்க ஆசை!
 
 
 
--பிரியா