குழப்பத்தின் பயணம்.....

 
நிறைவேறா பயணத்தில் 
தொலையும் நிமிடங்கள் 
முற்றுபெறாத பக்கங்களாய்
வாசிக்கும் புத்தகம் 

குழப்பத்தின் பாதையில் 
வெளிச்சத்தின் தேடல் 
நிஜங்களின் தேடலில் 
நிழல்களின் சங்கமம் 

உனக்கான காத்திருத்தலில்
எனக்கான நாட்கள் 
முடிந்தும் முடியாமலும்...
தெரிந்தும் தெரியாமலும்...
 
 
--பிரியா