உன் காதலுக்காய்....

 
என் சொர்கமும் நரகமும் 
உன் ஒவ்வொரு அசைவிலும்... 

என் மௌனமும் மொழியும் 
உன் வேல்விழி பார்வையிலே 

என் உயிரும் உணர்வும் 
உன் ஒற்றை வார்த்தையிலே 

என் வசந்தமும் கோடையும்
உன் பாத சுவடுகளில் 

என் அத்துனை செயல்களும் 
உன் உயிர்வழி காதலுக்காய் 

என் அத்துனையும் நீயாய் 
உன் காதல் ஒன்றிற்காய்.....
 
 
 
--பிரியா