கனவுகள் கருகிய என் சகோதரிக்காய்...

 
பூஞ்சைபிடித்த காலன் தேசமே 
என்றுதான் விழித்துக் கொள்வாய் 

தெருவெங்கும் ஓடும் பெண்ரத்தம் 
உன்னைக் குளிப்பாட்டி ஒழுங்காக்கட்டும் 

வேண்டாம் பெண்ணே வேண்டாம் 
இப்பாரதம் வேண்டவே வேண்டாம் 

பிரம்மனிடம் சென்று சொல் 
இன்னுமொரு பிறவி இருந்ததால் 

இந்த புண்பட்ட பாரதம் 
வேண்டவே வேண்டாம் என்று 

அழிந்து போகட்டும் தேசம் 
அடுத்த தலைமுறையே இல்லாமல் 

அழிந்து போகட்டும் பெண்ணை 
கேடாய் தொடும் தேகங்களெல்லாம் 

அழிந்து மறைந்து போகட்டும் 
அக்கினியின் நீள நாக்குகளில் 

காமத்தீய்க்கு இரையாகிப் போய் 
பெண் தொட்ட தேசம் 

கோபம் கொண்ட கடலன்னை 
பொங்கட்டும் இன்று ஆவேசமாய் 

இவர்களில் எவரும் திருந்திடவில்லை 
உணர்வதுமில்லை உண்மை உணர்வுகள் 

மீண்டும் வந்தாலும் மிதிபட்டுப்போவாய் 
மதிகெட்ட இம்மூடர் காலடியில் 

வேண்டாம் பெண்ணே வேண்டாம் 
இப்பாரதம் வேண்டவே வேண்டாம் 

பெண்சுதந்திரம் உள்ள தேசமொன்று 
எங்கானும் உண்டா தேடிப்பார் 

அங்கே பிறந்து தீர்த்துக்கொள் 
கருகிய உன் கனவுகளை....
 
 
 
--பிரியா