ஒரு மடந்தையின் புலம்பல்...

 
எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள் 
என்னால் எனக்காய் 
எத்தனை அம்மா!

தோளில் சுமந்தது
போதாதென்றா அப்பா 
மனதிலும் சேர்த்து 
சுமைகளை சேர்கின்றேன் 

மங்கையின் ஜனனம் 
மதிப்பற்ற நாட்டில் 
மரணம் கூட 
மண்ணின் வாசம் 

எத்தனை யுகங்கள் 
கடந்து போயினும் 
மதிப்பற்று போனோம் 
மடந்தைகள் நாங்கள்

வளரும் வரை 
தேவதைகள் நாங்கள் 
வளர்ந்த பின்போ 
தீராத வதைகள்... 

தாயின் வயிற்றில் 
உதித்த கணமே 
உரைத்திருந்தால் யாரும் 
மரித்திருப்பேன் அப்போதே!

விடியல்கள் தேடி 
விடைகளைத் தேடி 
விடைபெற்றுப் போனோம் 
விளங்காத புதிராய்!
 
 
--பிரியா