பறவை நான் - சுதந்திர பறவை நான்.....

 
கட்டுண்ட கூண்டுகள் 
கட்டுபடுத்த முடியாத 
பறவை நான் - சுதந்திர 
பறவை நான் 

வானமென்னும் எல்லையில்லா 
விண்வெளி தொடும் 
வேகம் எனக்கு 

தொடுவானம் தொட்டு 
தொலைவுகளைத் தாண்டும் 
விவேகம் எனக்கு 

காலங்கள் கடந்து 
நிலைத்து நிற்கும் 
வாழ்க்கை எனக்கு 

நினைவுகளைத் தாண்டி 
நீந்திச் செல்லும் 
செதில்கள் எனக்கு 

எல்லைகள் எத்தனையோ 
அத்தனையும் கடக்கும் 
கனவுகள் எனக்கு 

எல்லைகளில்ல வெளியெல்லாம் 
எனக்கே எனக்கு 
இத்தனையும் இருந்தும் -சிலநேரம் 

சிறகுகள் முறிக்கப்பட்ட 
பறவை நான் - சுதந்திர 

பறவை நான்