ஓ பாட்டி....

 
எத்தனைதான் சுருக்கங்கள் 
எண்ணிவிட எத்தனித்தேன் 
பாட்டியின் முகத்தினிலே 

ஒவ்வொரு சுருக்கமும் 
ஒவ்வொரு கதையை 
தன்னகத்தே கொண்டு 

எத்தனை ஆசைகள் 
எத்தனை கோபங்கள்
எத்தனை பரிதாபங்கள் 
எத்தனை அழுகைகள் 

அத்துனையும் ஒன்றுசேர்ந்து 
உன் முக சுருக்கமாய் 
ஆனதா என் பாட்டி!

இத்துனை காலங்கள் வாழ்ந்தாயே 
இனி உனக்காய் உனக்கென
ஆசையேதும் உண்டா.. 

ஒன்றின்று உள்ளது என்றால்
எனென்று கேட்டேன் நான் 

ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் 
பேரனை காண வேண்டும் 
என் மகனை பார்த்தல் சொல்வாயா?.........

என்னென்று சொல்வேன் நான் 
கேள்விக்கு பதிலொன்றும் உரைக்காமல்
மெல்ல நடந்தேன் அவ்விடம் விட்டு 

சென்ற இடம் முதியோர் இல்லம்