அண்ணனும் தங்கையும்...

 
கைகோர்த்து நடை பழகி 
கால்தட்டி விளையாடி 
எனக்கே எனக்கென்று - அனைத்தும் 
அடம்பிடித்து பெற்று 

சின்னதாய் சிரித்து 
செல்லமாய் கோபித்து 
பெரிதாய் சண்டையிட்டு 
அடுத்தநொடி சேர்ந்து 
கொஞ்சம் பகிர்ந்து 
நிறைய பெற்று 
கூடவே வளர்ந்து 

துன்பம் வருகையில் தோள்சாய 
மடிமேல் தலைவைத்து அழ 
கட்டியணைத்து இன்பம் பகிர 
ஏற்றங்களில் துணையாய் நிற்க 

அம்மா எனக்கு 
அப்பா உனக்கென 
பாகம் பிரித்து...
காக்க கடிகடித்து 
தின்பண்டம் பிரித்து 

என்னதான் சொல்லுங்கள் 
எவ்வளவோ அழகு 
அண்ணன்தங்கை உறவு 

வளர்ந்தபின் வரன்தேடி
வரதட்சணை பலகொடுத்து 
மாமியார் வீடனுப்பி 

அவள் பெற்றெடுத்த பிள்ளைக்கும் 
மாமன் முறை செய்து 
காலமெல்லாம் தோள்தாங்கி 
குழந்தையும் ஆளாக்கி 
அப்பப்பா எத்தனை கடமைகள் !

இத்துனையிலும் அழகு 
எத்தருணமும் மாறாத 

அண்ணனின் அன்பு!...

 

 

--பிரியா