என் நண்பன்...

 
கண்டும் காணாமல்
மிதித்துச் சென்ற 
ஒற்றைப் பனித்துளியை 
தன்வசப் படுத்தும் 
அவன் ஒரு 
இயற்கை நேசன் 

வெட்டவெளி சூரியன் 
எல்லோரையும் தகிக்க 
அவனுக்கு மட்டும் 
மின்னும் கதிர்களாய் 
வெம்மையை தாண்டிய 
வனப்பின் ரசிகன் 

தாயைத் தாண்டி
சேயின் சிரிப்பை 
சிதறாமல் சேர்த்து 
உதிராமல் அளித்த 
அவன் ஒரு 
தாயும் தந்தையுமானவன்

மற்றவர் கண்ணுக்கு
வெறும் சதையாய் 
பெண்ணின் தோற்றம் 
அவனுக்கு மட்டும் 
கலை கோயிலாய் - அவன் 
கலைத்தாயின் தவப்புதல்வன் 

மங்கையை தவிர்த்து 
மண்ணை தவிர்த்து 
மொழியும் தாண்டி 
மதம் கடந்து 
நேசம் காட்டும் - அவன்
படைப்பின் பிரம்மா