என் அன்பு மரியா....

 
என் அன்பு மரியா 
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ? 

குட்டியாய் மெருதுவாய்
உன் கைகளால் 
என் சுண்டு விரலைப்பற்றி இருந்த நிமிடம் 
திரும்ப வருமா 
காலத்தோடு அதை நீ எங்கே கொண்டு சென்றாய் ?

நீ பள்ளிக்கு சென்ற 
முதல் நாள் 
நான் அழுதது உனக்கு தெரியுமா?

பூ கேட்டு நீ அழுத போது 
நான் கொடுத்த ஒற்றை ரோஜாவை 
எங்கே வைத்திருக்கிறாய் ?

என் அன்பு மரியா 
இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?

என் மூச்சு காற்றில் 
என் ஆன்மாவில் 
கலந்துவிட்டாயா?
இல்லை 
அனுதினமும் 
மரியா மரியா மரியா 
என்று உன் பெயரை 
உச்சரித்துக்கொண்டிருக்கும் 
என் வார்த்தைகளில் 
ஒழிந்துருக்கிறாயா?

இப்போது நீ எங்கே இருக்கிறாய் ?

நீ என்னுடன் தான் இருக்கிறாய் 
நான் நீயாக 
நீ நானாக 
ஒரு புன்னகையாக 
ஒரு வாடாத மலராக 
என் கண்ணீராக 
என்றும் மாறாத கனவாக 
நீ என்னுடன் தான் இருக்கிறாய் மரியா!!!!!!

-மகேஷ்
 
 
 
என் வரையில் நான் படித்ததில் இது மிக சிறந்த படைப்பு......இதை எழுதிய மகேஷ் என் படைப்பின் மிக சிறந்த வாசகர்....... மிக சிறந்த விமர்சகர் என் எழுத்துகளை வழி நடத்தும் நல்ல தோழர்....