நிலாமகள்

 
அண்டவெளியின் ராஜவீதியில் 
உலாவரும் நிலாமகள் 

நட்சத்திரங்கள் புடைசூழ 
எட்டெடுத்து செல்கிறாள் 

வெட்கம் வந்து சேர்கையில் 
மேகப்பட்டாடை உடுத்தி 

காணுங்கள் இக்காட்சியை 
அகமும்புறமும் பூரிக்க 

வழியெங்கும் இறைக்கிறாள் 
வெளிச்சமென்னும் வெள்ளிகாசை 

விரைவாய் வந்து 
எடுத்து செல்லுங்கள் 

உங்கள் வீட்டிலும் 
நிறையட்டும் வெளிச்சம் 

மெதுவாய் வந்தால் 
தேய்ந்தே போவாள் 

இரவின் பொழிவையும் 
குறைத்தே போவாள் 

வாருங்கள் சீக்கிரம் 
தயக்கமேதும் இன்றி 

வியந்துதான் செல்லுங்கள் 
இவ்வழகினைக் கொஞ்சம்
 
 
--பிரியா