2012 - உலக அழிவும் உள்ளூர் அரசியலும் :P

 

இன்றைய விவாத மேடையில் நாம் பார்க்க போவது இன்றைக்கு நடைபெறுவதாக இருந்த உலக அழிவு நடைபெறாமல் போனதன் முக்கிய கரணம் பற்றிய ஒரு அலசல் 

 

தொகுப்பாளர் : வணக்கம் நேயர்களே.... இன்றைய நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருப்பது உலக அழிவு நடைபெறாமல் போனதற்கான முக்கிய காரணமாக சொல்லப்படும் அலி ரப்பர் தரம் குறித்து.... அலி ரப்பர் சரியாக வேலை செய்யாமல் போனதற்கான காரணங்கள் குறித்தும் 

 

இதை குறித்து நம்முடன் விவாதிக்க ஆளும் கட்சியின் சார்பாக ஒருவரும் எதிர் கட்சியின் சார்பாக மற்றொருவரும் வந்துள்ளனர்.இருவரையும் நமது நிகழ்சிக்கு நேயர்களின் சார்பாக வரவேற்கிறோம்.... 

 

 

 

முதலில்ஆளும் கட்சி பிரதிநிதியுடன் பேசுவோம் 

 

வணக்கம் அய்யா!

 

ஆ.க.பி. : ம்.. வணக்கம் வணக்கம்..... 

 

தொகுப்பாளர்: அய்யா நடைபெற இருந்த உலக அழிவு அப்படிங்கற முக்கியமான நிகழ்ச்சி நடைபெறாமல் போய்டுச்சு... இத ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த நம்ம மக்கள் இப்போ வெளிய கொந்தளிபோட இருகாங்க... அந்த மக்களுக்கு நீங்க என்ன சொல்ல நினைக்கறீங்க.... வழக்கம் போல இது எதிர் கட்சியின் சதி தானு சொல்ல போரீங்களா இல்ல புதுசா எதாச்சும் சொல்லுவீங்களா....

 

ஆ.க.பி. : இல்ல இதுல புதுசா சொல்ல என்ன இருக்கு... இது நிச்சயமா எதிர் கட்சியின் சதிதா அதுல சந்தேகமே இல்ல 

 

தொகுப்பாளர்: சரி அத விடுங்க... அத பத்தி நாம மறுபடியும் பேசுவோம்... இப்போ மக்களுக்கு நீங்க என்ன சொல்ல போரிங்க அதசொல்லுங்க முதல்ல... அப்புறம் மீதிய பேசுவோம் 

 

ஆ.க.பி. : மக்களுக்கு நா என்ன சொல்ல வரேன்னா... இந்த அரசாங்கம் இருப்பதே உங்களுக்காகதா .. உங்களோட நன்மைக்காகத்தா ...நாங்க இரவும் பகலும் துங்காமல் செயல்படுவதே உங்கள் நலனை மட்டுமே கருதி...நேற்று நடைபெற இருந்த உலக அழிவு என்பது எங்களோட கனவு உங்களுடையதும் தான் ... அது அந்த அலி ரப்பர் ல ஏற்பட்ட சில பல தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா நடைபெறாம போய்டுச்சு... அதுக்காக எங்களோட கட்சியின் சார்பா எங்க வருத்தங்கள தெரிவிச்சுகறோம்....இதுக்கு எதிர் கட்சியின் சதியே முக்கிய காரணம் அபபடின்றதும் மறக்காம இங்க தெரிவிச்சுக்கறேன்... மக்கள் யாரும் கவலப்பட வேண்டாம் அந்த அலி ரப்பர் ஐ சரி படுத்தும் பணிகள் துரித கதியில் நடைபெறுகிறது அதனால் கூடிய விரைவில் உலக அழிவு நடைபெறும்.. அதில் மாற்றமே இல்லை... சிறிது கால தாமதம் ஏற்பட்டாலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்த பணியை செவ்வனே நிறைவு செய்வோம் என்பதனை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்

 

தொகுப்பாளர்: ஆளும் கட்சியை சேர்ந்த அய்யா நீண்ட நெடு நேரம் பேசி விட்டதால் இப்பொது ஒரு இடைவேளை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்... சிறிய இடைவேளைக்கு பிறகு சந்திப்போம் நேயர்களே 

 

(இடைவேளை ..........................)

 

தொகுப்பாளர்: இடைவேளைக்கு பின் அனைவரையும் நிகழ்சிக்கு வரவேற்கிறோம் இப்பொது உலக அழிவுக்கான அலி ரப்பர் இல் இடம்பெற்ற தொழில் நுட்ப்ப கோளறு குறித்து எதிர் கட்சி பிரதிநிதி அவர்கள்  தங்களுடைய கருத்துகளை தெரிவிப்பார்.. வணக்கம் அய்யா...

 

எ.க.பி:வணக்கம் ...

 

தொகுப்பாளர்: இபொழுது உங்கள் கருத்துகளை சொலுங்கள் அய்யா 

 

எ.க.பி: என்னதேங்க சொல்றது... நம்ம நாட்டுல நடக்குற ஆட்சி பத்தி சொல்ல இத விட மோசமான உதாரணம் என்ன வேணும்... கேவலம் ஒரு அலி ரப்பர் அத இவங்களால சரியாய் செய்ய முடில இவங்கலாம் ஆட்சி நடத்தி என்னத்த செய்யறங்களோ.. பாருங்க மக்களே இதெல்லாம் நீங்காத கேக்கணும்... இவங்கள மாறி ஆளுக கைல ஆட்சி இருந்த இப்படித்தாஇருக்கும்...இதுவே இந்த நேரம் நாங்க ஆட்சிக்கு வந்துருந்தஇந்த உலக அழிவு அப்படின்றது சொன்ன மாறி சொன்ன நேரத்துல நிகழ்த்தி காட்டிருப்போம் 

 

ஆ.க.பி: நிகழ்த்தி காட்டிட்டாலும்... அவர கொஞ்சம் பாத்து பேச சொல்லுங்க 

 

தொகுப்பாளர்: அப்போ நீங்க இதுக்கு காரணமா என்ன சொல்ல வரீங்க 

 

எ.க.பி: வேற என்னங்கோ இவங்களோட மெத்தன போக்கு தா எல்லாத்துக்கும் காரணம் வேற என்ன 

 

தொகுப்பாளர்: ம்ம்ம்ம்.... சரி அய்யா இப்போ நீங்க சொல்லுங்க அலி ரப்பர் ல ஏற்பட்ட கோளறு என்ன இது எப்படி நடந்துச்சு 

 

ஆ.க.பி:அது ஒன்னும் இல்லைங்க அந்த அலி ரப்பர் இருக்கில்ல அத கைல எடுத்தபோ கொழம்பு மாறி கொலகொலனு போயிடுச்சுங்க அப்படி ஆகும் பொது அத வந்து கைகளால எடுக்க முடியாம போய்டுச்சு... நம்மோட விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்தாங்க கடைசி முயற்சியா அடுப்புல வச்சு காய்ச்சியும் பாக்கலானு யோசிச்சாங்க பட் அவ்ளோ பெரிய அடுப்பு அப்போ கெடைக்கல... இப்போ அந்த பெரிய அடுப்பு செய்யறதுக்கான வேலைகள் நடந்துட்டு இருக்கு... அது முடிஞ்ச உடனே ரப்பர அதுல போட்டு காய்ச்சி சரி பண்ணிடலாம்...இத மகிழ்ச்சியோட இங்க பகிர்ந்துக்கறோம் 

 

எ.க.பி:ஏற்கனவே செஞ்சு எல்லாத்தையும் முடிச்சுட்ட மாறி தா...

 

ஆ.க.பி: எங்கள சொல்ற நீங்க இதுக்காக என்ன எல்லாம் செஞ்சிங்க சொல்லுங்க பாக்கலாம்.. சும்மா பேச மட்டும் கூடாதுங்க 

 

 

 

எ.க.பி: @#$%^&***!~@#$#$%%

 

ஆ.க.பி: @!#$%^&*~!@##$

 

தொகுப்பாளர்: அய்யா தயவு செஞ்சு ரெண்டு பெரும் கொஞ்சம் அமைதியா இருங்க 

 

தயவு செஞ்சு 

 

ஐயோ அது chair அதெலாம் கைல எடுக்க கூடாது.... அய்யயோ அது மைக் ங்க 

 

ஐயோ அம்மா!

 

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் 

 

டைரக்டர் : அய்யயோ அது கேமரா 

 

 

 

( நிகழ்ச்சியில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்... டொஇங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் )

 

Moral of the Program : ( எது நடந்தாலும் நாமத கவனமா இருக்கனும் அது உலக அழிவா இருந்தாலும் சரி அத பற்றின நிகழ்ச்சிய இருந்தாலும் சரி ) 

 

 

( மைக் chair கேமரா எல்லாம் போச்சே :-|  )

 

 

Dialogue

Screenply

editing

direction

this & that everything

 

....

 

 

One ond only Priya no more sharings :P