மகளிர் தினமும் மகளிரும்

இன்று உலக மகளிர் தினமாம் வாழ்த்துகள் கூறுகின்றனர் அனைவரும்... எப்போதும்போல் தொலைகாட்சிகள்ஏதோ ஒருபெண்ணிற்கு எதோ ஒரு காரணத்தால் விருதை கொடுத்து மகளிர் தினத்தை கொண்டாடுகின்றனர்... ஆண் மக்கள் அனைவருக்கும் தன்னை சுற்றிலும் உள்ளஅனைத்து பெண்களின் நினைவும் இன்று ஏனோ சடாரென எழுகிறது.... இணையத்தில் தேடி பிடித்த புகைப்படத்துடன் வாக்கியம் சேர்த்து வரிந்து கட்டி கிளம்பி விட்டனர் வாழ்த்துகள்கூற.... அது சரி இவர்களில் எத்தனை பேர் அவரவர் வீட்டில் உள்ள தாய்க்கும் தமக்கைக்கும் மனைவிக்கும் இன்ன பிறருக்கும் நேரில் வாழ்த்து கூறி இருப்பார்கள். தொடங்கி வைத்தால் முடிவில்லா விவாதமாக மாறலாம்... இவர்களில் ஒரு சிலர் மட்டுமே வித்தியாச பட்டவர்கள் மகளிர் தினத்தை தாண்டியும் மகளிருக்கைபேசுபவர்கள் அவர்களை இதில் சேர்க்கவில்லை.... 
வாழ்த்துக்கள் வாழ்த்துபவர்கள் ஒரு புறம் இருக்கட்டும் உண்மையில் இந்த மகளிர் தினத்தை கொண்டாடும்சூழ்நிலையில் நாம் இருகிறோமா... நம்மை சுற்றிலும் உள்ள சமூகமும் சூழலும் அதற்கானதாய் உள்ளத... 

பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு நொடியிலும் என் சகோதரிகள்ஏதாவது ஒரு பெயரினால் எதாகிலும் ஒரு சம்பவத்தினால் அவஸ்தைப்பட்டு கொண்டே இருக்க எங்கனம் கொண்டாடுவோம் மகளிர் தினம்... இதை நான் எழுதும் நேரத்திலும் கூட நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் சிசு காரணமே அறியாமல் கள்ளிப் பால்அருந்தி கொண்டு வந்த காரணம் புரிவதற்குள் விடை பெற தயாராகி விட்டது, அதும் தாண்டி வளர்ந்த என் மற்றொரு சகோதரி ஏதோ ஒரு மூலையில் பாலியல் வன்முறைக்கு ஆட்படுகிறாள், அதனையும் தாண்டி திருமண பந்தத்தில் நுழைந்த இன்னுமொரு சகோதரி வரதட்சணை கொடுமையால்ஏதோ ஒரு வகையில் உயிரை இழக்கிறாள் அல்லது வாழ்கையை இழக்கிறாள்... உலகத்தின் ஒரு மூலையில் இன்னொரு சகோதரி மத கோட்பாடுகள் என்னும் பெயரால் அடக்கி ஒடுக்கப்பட்டு சுயத்தை இழந்து வாழ்கிறாள்... இப்படி பிறக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் ஏதாகிலும் ஒரு மூலையில் ஏதோ ஒரு பெயரால் வன்முறைக்கும் அடக்கு முறைக்கும் ஆட்பட்டு கொண்டே இருக்க எங்கனம் கொண்டாடுவோம் மகளிர் தினம்....ஜோதியும், வினோதினியும், வித்யாவும் வெளிவந்து பேசப்பட்ட உண்மைகள் வெளிவராதவை எத்தனையோ...

ஆணாதிக்கத்துக்கும் அடிமை மனப்பான்மைக்கும் முதலில் நெருப்பிட்டு கொளுத்துவோம் இதுவரை வந்த தலைமுறைகள் சீரழிந்தது போகட்டும் இனி வரும் தலைமுறையகிலும் நம்பிக்கைக்கு உரியதாய் இருக்கட்டும்.... ஆண் குழந்தைகள் பெண்ணும் தன்னை போல் ஒருத்தி என்பதை உணர்த்து வளரட்டும், பெண் குழந்தைகள் தன்னை தானே உணர்ந்தவர்களாய் தன்னம்பிக்கை உடையவர்களாய் வளரட்டும், தேசம் நம்பிகைகளின் மீது கட்டமைக்கபடட்டும். அதன் பிறகு கொண்டாடுவோம் உண்மையான மகளிர் தினம்... அதுவரை வரும் தினங்கள் அனைத்தும் அதற்கான நம்பிகையை வழங்கும் தினங்களாக அமையட்டும்....