எழுத்தை அதிகம் நேசிப்பவள்... மௌனத்தில் உறைந்து போயிருக்கும் என் எண்ணங்களை வெளிபடுத்த எழுத்தை காட்டிலும் சிறந்த விஷயம் வேறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை..... எல்லைகளற்ற எண்ண வெளியில் என்னுடைய எண்ணங்கள் முழுவதுமாய் வெளிப்படுவது என் எழுத்துகளின் வடிவில்தான்...எழுத்து எனக்கு  ஒரு தியானம் போல்... என் எழுதுகோலும் புத்தகமும் எப்பொழுதும் நான் எழுதும் எழுத்துகளை எதிர்ப்பதில்லை, என்னை நையாண்டி செய்வதில்லை, என் எண்ணங்களுக்கு தடை இடுவதும் இல்லை. ஏதொன்றையும் எழுதி முடிக்கையில் மனதில் எழும் அமைதி வேறு எந்த செயலினாலும் விளைவதில்லை அதனாலேயே எழுத்து எனக்கு மிகவும் நெருக்கமாகி போனது...பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்குண்டு எப்பக்கமும் முழுமையாய் சாயாமல் எண்ணச் சிக்கல்களில் நான் எழுதிய வரிகள் இங்கே....  உங்கள் கண்முன்... உங்களது கருத்துகளையும் ஊக்குவிப்பையும் எதிர் நோக்கி....

 

பாரதியின் எழுத்துகளின் மேல் ஆழ்ந்த காதல் உண்டு...அவரை படித்து எழுத தொடங்கியதாலோ என்னவோ காதலை தாண்டி பெண்ணியம் சமுதாயம் அனைத்திற்கும் அதிகமாய் நானே பிரதிபளிக்கப்படுகிறேன் என் எழுத்துகளில்... அதே போல் தமிழின் மேல் தீரா காதலை என் பள்ளி வயதிலேயே உருவாக்கி தந்த என் பள்ளி தமிழாசிரியைக்கு என்னுடைய நன்றிகள்என்றும்... அவருடைய வாசிப்பில் மயங்கியே கவிதை தமிழின் மேலும் ஒரு மயக்கம்... தமிழை உண்மையிலேயே ஒரு அமுதமாக ஊட்டுவித்தவர் அவர்...